கிரிக்கெட் விதிமுறைகளை பரிபாலனம் செய்யும் மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகம் உலகக்கிண்ண தொடரில் பங்களாதேஷ் அணிக்கெதிராக டைம் அவுட் முறை மூலமாக ஆட்டமிழந்த அஞ்சலோ மத்தியூஸின் ஆட்டமிழப்பு சரியானது என அறிவித்துள்ளது.
மத்தியூஸ் தனது தலைக்கவச பட்டி அறுந்த விடயத்தை நடுவர்களிடம் தெரிவித்திருந்தால் அவர்கள் அதனை கருத்திற் கொண்டு ஆட்டமிழப்பு தொடர்பில் முடிவு எடுத்திருப்பார்கள் என MCC வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைக்கவசத்தை எடுக்க முயற்சிக்க முதலில் அதனை செய்திருக்க வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது உபகரணத்தை மாற்றவேண்டுமானால் நடுவருக்கு தெரியப்படுத்த வேண்டும். அதனை மத்தியூஸ் செய்ய தவறியிருந்தார் என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆட்டமிழப்பு கோரும் போது 2 நிமிடங்களை தாண்டியிருந்தது. நடுவர்கள் சரியாக நேரத்தை கணித்தே ஆட்டமிழப்பை வழங்கியுள்ளார்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.