இந்தியா அதிரடி துடுப்பாட்டம்

இந்தியா அதிரடி துடுப்பாட்டம்

இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 45 ஆவது போட்டியாகவும் முதல் சுற்றின் இறுதிப்போட்டியாகவும் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இன்று (12.11) நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 410 ஓட்டங்களை பெற்றது.

இந்தியா அணி ஆரம்பம் முதலே அதிரடி நிகழ்த்தி முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 100 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இருவரும் அரைச்சதங்களை பூர்த்தி செய்துகொண்டனர். ரோஹித் ஷர்மா அவரது 55 ஆவது அரைச்சதத்தையும், சுப்மன் கில் அவரது 12 ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்துகொண்டனர். முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் அடுத்த விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் 71 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். விராத் கோலி அவரது 71 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்துகொண்டார். விராத் கோலி ஆட்டமிழந்ததுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல் ஆகியோர் 208 ஓட்டங்களை அதிரடியாக துடுப்பாடி இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டதுடன் இருவரும் சதங்களை பூர்த்தி செய்துகொண்டனர். லோகேஷ் ராகுல் அவரது 7 ஆவது சதத்தையும், ஷ்ரேயாஸ் ஐயர் அவரது 4 ஆவது சதத்தையும் பூர்த்தி செய்துகொண்டனர்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
ரோஹித் ஷர்மாபிடி – வெஸ்லி பரசிபஸ் ட லீடா615482
சுப்மன் கில்பிடி – தேஜா நிடமனுருபோல் வன் மீகெரென்513234
விராத் கோலிBowledரோலோஃப் வன் டெர் மேர்வ்515651
ஷ்ரேயாஸ் ஐயர்  12894105
லோகேஷ் ராகுல்பிடி – சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்பஸ் ட லீடா10264114
சூர்யகுமார் யாதவ் 020100
       
       
       
       
       
உதிரிகள்  15   
ஓவர்  50விக்கெட்  04மொத்தம்410   
பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
ஆர்யன் டட்07005200
லோகன் வன் பீக்100010700
கொலின் அக்கர்மன்03002500
போல் வன் மீகெரென்10009001
ரோலோஃப் வன் டெர் மேர்வ்10005301
பஸ் ட லீடா10008202

இந்தியா அணி ஏற்கனவே அரை இறுதிக்கு தெரிவாகிவிட்டது. நெதர்லாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சம்பியன் கிண்ணத்திற்கு தெரிவாகும்.

இந்தியா அணி அரை இறுதியில் நியூசிலாந்து அணியுடனும் அவுஸ்திரேலியா அணி அரை இறுதியில் தென்னாபிரிக்கா அணியுடனும் மோதவுள்ளன.

அணி விபரம்

இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி

நெதர்லாந்து அணி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் ட லீடா, வெஸ்லி பரசி, தேஜா நிடமனுரு, போல் வன் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்

Social Share