தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (12.11) பிற்பகல் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அலுவலகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து இந்து பக்தர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

