விளையாட்டு துறை அமைச்சர் இந்த வாரம் பதவி விலகுவார் அல்லது பதவி நீக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக டெய்லி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தரப்பில் அவ்வாறு எதுவும் இல்லை என வி மீடியாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவாகரம் ஆரம்பித்தது முதல் பாரளுமன்றம் வரை விடயம் கொண்டு செல்லப்பட்டது. ஜனாதிபதிக்கும் அமைச்சரக்குமிடையில் இந்த விடயம் தொடர்பில் முரண்பாடுகள் ஏற்பட்டன.
பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் பதவி விலக வேண்டுமென சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் சர்வதேசக் கிரிக்கெட் பேரவை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தடை செய்துள்ளது.
ஜனாதிபதி உத்தரவாதம் தந்தால் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தடையை நீக்க தான் பேசுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவருக்கும் விளையாட்டு துறை அமைச்சருக்குமிடையில் பாராளுமன்றத்தில் சந்திப்பு இடம்பெற்றதாக டெய்லி மிரர் தனது செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மேன் முறையீடு செய்யவுள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரண்சிங்க கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.