தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பிறகு, இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியைத் தவிர்த்து, இந்தியாவின் மேலும் இரண்டு பிரதான நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மும்பை மற்றும் கொல்கத்தாவில் காற்று மாசுபாடு இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட்டம் காரணமாக மும்பை மற்றும் கொல்கத்தாவில் அதிகமாக பட்டாசு,வெடிப்பதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.