நேற்று(13.11) மட்டக்களப்புக்கு விஜயம் செய்த வேளையில் கூடைப்பந்தின் தந்தை(father of basketball) என போற்றப்படும் பங்குத்தந்தை ஜுஜின் ஜோன் ஹேர்பேர்டின் சிலைக்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மரியாதை செலுத்தினார். கூடைப்பந்து விளையாட்டின் ஊடாக இனங்களுக்கிடையில் உறவை மேம்படுத்தியவர் என ஜூலி சங் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜுஜின் ஜோன் ஹேர்பேர்ட் 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்து கல்வி சேவைகளை பல இடங்களிழும் வழங்கி வந்தார். அதிபராகவும் இவர் கமடமையாற்றியிருந்தார். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் கூடைப்பந்தின் பயிற்றுவிப்பாளராக 1978 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை செயற்பட்டவர். இந்தக்காலத்தில் புனித மிக்கேல் கல்லூரி தேசிய சம்பியனாக திகழ்ந்த அதேவேளை அசைக்க முடியாத அணியாகவும் திகழ்ந்தது.
ஜுஜின் ஜோன் ஹேர்பேர்ட் மட்டக்களப்பு வாழைச்சேனையில் 1990 ஆம் ஆண்டு அவரது வாகன ஓட்டுனருடன் காணாமலாக்கப்பட்டிருந்தார். இருவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதுவர் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தப்பட்ட ஷியோன் தேவாலயத்துக்கு சென்று பார்வையிட்டு தேவயாலய பங்குத்தந்தையுடன் பாதிக்கப்பட்டவர்களது நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

