பொரளை செர்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவன் ஒருவர் தவறி விழுந்து பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளை மெகசின் வீதியைச் சேர்ந்த (16) வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
குறித்த மாணவன் நேற்று (13.11) வீட்டின் பின்புறம் ஓடிச் சென்ற வேளையில் தவறி விழுந்ததில் இவ்வாறு காயமடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.