சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தடுத்து வருவதாக ஜனாதிபதி செயலக தகவல்களை அடிப்படையாக வைத்து ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேசபந்து தென்னக்கோனின் கடந்த கால மோசமான பதிவுகள், 2022 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட அமைதி வழி போராட்டத்தின் மீதான தாக்குதலை தடுக்க முயற்சிக்காமை போன்ற காரங்ணகளினால் அவரை பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி ரணில் விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னக்கோனை பொலிஸ் மா அதிபராக நியமிக்க பொது பாதுக்காப்பு அமைச்சர் ரிரான் அலஸ் அக்கறை காட்டி வருவதாகவும் மேலும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உயர் பீடத்துடன் தென்னக்கோன் செயற்பட்டு வருவதாகவும் மேலும் அந்த செய்தியில் சுட்டிக் கட்டப்பட்டுள்ளது.
தபோதைய பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரட்டனவின் பதவிக் காலம் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்த போதும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பல தடவைகள் நீடிக்கப்பட்டுள்ளது.