ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால தடை மீள் விசாரணையிலிருந்து விலகினார் நீதிபதி

ஸ்ரீலங்கா சிரிக்கட் இடைக்கால நிர்வாகசபை மீது விதிக்கப்பட்ட தடை வழக்கை மீள விசாரிக்கக் கோரி விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று(13.11) மீள் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தீர்ப்பை வழங்கிய மீள் முறையீட்டு நீதிபதி குழுவின் தலைவர் நீதிபதி நிஸ்ஸங்க கருணாரட்ன குறித்த வழக்கு விசாரணையிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அமைச்சர் மட்டுமன்றி பாரளுமன்றத்தில் அமைச்சர்கள் அடங்கலாக பலரும் அவருக்கு எதிராக விம்மாசனங்களை முவைத்திருந்த நிலையில் தான் விலகுவதாகவும், அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் நீதிபதி தெரிவித்துளளார். இதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணை பிற நீதிபதி குழு முன்னிலையில் விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply