பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்!

தாம் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் பணயக்கைதிகள் குழுவை விடுவிக்க சம்மதிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

5 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டால், பிணைக் கைதிகளாக உள்ள 70 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிப்போம் என ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹமாஸின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு உபைதா வெளியிட்ட குரல் பதிவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயல்படும் கட்டார் அதிகாரிகளுக்கு ஹமாஸ் அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply