மலையக ரயில் சேவையில் தாமதம்!

மலையக ரயில் சேவையின் ஹாலிஎல மற்றும் உடுவர நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததன் காரணமாக இன்று (14.11) பிற்பகல் முதல் பதுளை – கொழும்பு ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக மலையக ரயில் பாதையில் பாரிய மண் மேடு சரிந்து விழுந்துள்ளதாகவும், தற்போது கண்டியில் இருந்து பதுளை வரை இயக்கப்படும் ரயில் மற்றும் பொடிமணிக்கே ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் ரயில் தெமோதர ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply