டயானா விவகாரம் – விசாரணை அறிக்கை கையளிப்பு!

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான உண்மைகள் இந்த அறிக்கையில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரால் நியமிக்கப்பட்ட அறிக்கை குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான அஜித் ராஜபக்ஷவினால் இன்று (14.11) சபாநாயகரிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் சமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன, கயந்த கருணாதிலக, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சட்டத்தரணி தலதா அத்துகோரள மற்றும் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல ஆகியோர் உள்ளடங்குவர்.

Social Share

Leave a Reply