கோட்டாபய ராஜபக்ச,மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ,அஜித் நிவார்ட் கப்ரால், டபிள்யூ.டி.லக்ஷ்மன்,பி.பி.ஜயசுந்தர மற்றும் ஆடிகல உள்ளிட்டோர் நாட்டை வங்குரோத்தாக்கியதற்கு அவர்களே பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தலைமையிலான சட்டக்குழு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களை இணைத்துக் கொண்டு சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவுக்கு,தீர்ப்பை வழங்கிய கனம் உயர் நீதிமன்ற நீதிபதிகள்,மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு மேற்கண்ட நபர்கள் பொறுப்பு என்று தெரிவித்துள்ளனர் என்றும்,இது எமது நாட்டின் உயர் நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டை வங்குரோத்தாக்கியதற்கும் பொருளாதார ரீதியாக அழித்ததற்கும் ராஜபக்சர்கள் உள்ளிட்ட தரப்பினர் பொறுப்பு என்று கனம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும்,இதன் பிரகாரம் எமது நாட்டை வங்குரோத்து செய்தவர்கள் யார் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாம் அரசியல்வாதிகள் என்பதால் நாம் நாட்டின் உரிமையாளர்கள் அல்லர் என்றும்,தற்காலிக பொறுப்பாளிகளே என்றும், ராஜபக்சர்கள் யுத்த வெற்றியை முதன்மையாக எடுத்துக் கொண்டு நாட்டை முழுவதுமாக எழுதி நாட்டை அழித்தார்கள் என்றும்,இந்த தீர்ப்பால் ராஜபக்சக்கள் உள்ளிட்ட இந்த குழு 220 இலட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்பத் திட்டத்தின் 47 ஆவது கட்டத்தின் கீழ் களுத்துறை அகலவத்தை மிஹிது மத்திய மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (14.11) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.