இந்தியா எதிர் நியூசிலாந்து உலகக்கிண்ண அரை இறுதி இன்று.

இந்தியா எதிர் நியூசிலாந்து உலகக்கிண்ண அரை இறுதி இன்று.

இந்தியா அணிக்கும், நியூசிலாந்து அணிக்குமிடையிலான உலகக்கிண்ண தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டி இந்தியா, மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. பிற்பகல் 1.30 இற்கு நாணய சுழற்சி நடைபெற்று 2.00 மணிக்கு போட்டி ஆரம்பிக்கவுள்ளது.

கடந்த வருடம் அரை இறுதிப் போட்டியில் மோதிய அதே இரு அணிகள் இம்முறையும் அரை இறுதிப் போட்டியில் மோதுகின்றன. கடந்த முறை நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

இந்தியா அணி கடந்த முறையிலும் பார்க்க இம்முறை பலமாக களமிறங்கியுள்ளது. இந்தியாவில் போட்டி நடைபெறுவது மேலதிக பலம். நியூசிலாந்து அணி பலமாக ஆரம்பித்த போதும் இறுதியில் தடுமாறியே அரை இறுதி வாய்ப்பை பெற்றுக்கொண்டது. இந்தியா இந்த வருட தொடரில் 9 போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றுள்ளது.

2011 ஆம் ஆண்டு உலக சாம்பியனாக இந்தியா அணி தெரிவான பின்னர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இம்முறை இறுதிப் போட்டி வரை சென்று வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

Social Share

Leave a Reply