பேருந்திலிருந்து இறங்கிய பெண் அதே பேருந்தில் மோதி பலி!

பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி, பேருந்தின் முன் வீதியைக் கடக்கச் சென்ற போது, ​​அதே பேருந்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (15.11) பண்டாரவளையில் பதிவாகியுள்ளது.

பண்டாரவளை, துல்கொல்ல பிரதேசத்தில் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பண்டாரவளை தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்த குறித்த பெண் பேருந்தில் இருந்து இறங்கி பேருந்தின் முன் வீதியைக் கடந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply