சர்வதேச கிரிக்கெட்டில் பெரியளவில் அளவில் சாதித்த வீரர்களை Hall of Fame என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் சபை கெளரவித்து வருகிறது.
இந்நிலையில். Hall of Fame என்ற அந்தப் பட்டியலில் புதியதாக இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜெயவர்த்தனேவை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2014இல் இலங்கை அணி டி20 உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
மேலும். ICC நடத்திய 4 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்றவர் இவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இலங்கை அணியின் முத்தையா முரளிதரன், குமார் சங்ககராவை தொடர்ந்து Hall of Fame விருது பெறும் 3ஆவது வீரர் இவர் ஆவார்.
இதேபோல்இ தென் ஆப்பிரிக்காவின் All Rounder ஆன ஷான் பொல்லாக்கை இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.