தமீழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா உயிரோடு இருப்பதாக சர்வதேச அளவில் AI தொழில்நுட்பத்தினூடாக வீடியோ ஒன்று மாவீரர் தினத்தில் வெளியிடப்படவுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு துறையினர் இலங்கை அரசுக்கு அறிவித்துள்ளதாக தகவலை அடிப்படையாக வைத்து டெய்லி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ மூலமாக நோர்வேயிலிருந்து இயங்கும் தமீழழ விடுதலை புலிகள் அமைப்பினால் வெளிநாடுகளில் பணம் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும், இதற்கு நோர்வேயிலுள்ள பிரபாகரனின் உறவினர்களிடம் சம்மதம் பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடியவன் என அழைக்கப்படும், பேரின்பநாயகம் சிவபரன் எனும் நபர் பல தடவைகள் புலிகள் அமைப்பை நோர்வேயில் மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளைகளில் அது புலனாய்வு பிரிவினரால் தடுக்கப்பட்து எனவும் டெய்லி மிரரின் செய்தி தெரிவித்துள்ளது.