கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகளில் மாற்றம்!

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகளை எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு குறைக்க தீர்மானித்துள்ளதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

VAT வரி அதிகரிப்பின் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டால் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகளை குறைக்கும் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படலாம் எனவும் அவர் தீர்மானித்துள்ளார்.

சிறு பண்ணையாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு விநியோகிப்பதால் முட்டையொன்றின் விலை 35 ரூபா முதல் 40 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்ய இயலுமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply