உலக சம்பியனானது அவுஸ்திரேலியா

20-20 உலக கிண்ண கிண்ண தொடரை முதற் தடவையாக அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியது. நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது. இதில் கேன் வில்லியம்சன் 85(48), ஓட்டங்களையும், மார்ட்டின் கப்டில் 28(35) ஓட்டங்களையும், கிளன் பிலிப்ஸ் 18(17) ஓட்டங்களையும் பெற்றனர். ஜோஸ் ஹெசல்வூட் 3 (4-16) விக்கெட்களையும், அடம் ஷம்பா 1 விக்கெட்டினையும் கைபப்ற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது. இதில் மிச்செல் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 77 (50)ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 53(38) ஓட்டங்களையும், கிளன் மக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 28(18) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரென்ட் பௌல்ட் 2(4-18) விக்கெட்களையும் கைப்பற்றினார்.
போட்டியின் நாயகனாக மிச்செல் மார்ஷ் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, போட்டி தொடர் நாயகனாக டேவிட் வோர்னர் தெரிவுசெய்யப்பட்டார்.

அவுஸ்திரேலியா அணி இரண்டாவது தடவையாக இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு, முதற் தடவையாக கிண்ணத்தை வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி முதற் தடவை இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

உலக சம்பியனானது அவுஸ்திரேலியா

Social Share

Leave a Reply