விகாரமஹாதேவி பூங்காவை மீண்டும் கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான விஹார மகாதேவி பூங்கா, 2011 செப்டெம்பர் 30 ஆம் திகதி முதல் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டது.
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட பூங்காவை அந்த நடவடிக்கைகளின் பின்னர் கொழும்பு மாநகர சபைக்கு மீள ஒப்படைக்க நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி விகாரமஹாதேவி பூங்காவிற்கு சொந்தமான 54 ஏக்கர் நிலப்பரப்பு கொழும்பு மாநகர சபையின் பொறுப்புப்பில் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.