ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைக்கான தடை தொடர்கின்ற போதிலும், இலங்கை அணி போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தின் ஸ்தீரமற்ற தன்மை காரணமாக இலங்கை கிரிக்கெடின் தடை தொடர்வதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
இனிவரும் போட்டிகளில் தடைகளின்றி இலங்கை அணி விளையாட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.