பசுமாடுகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

அரசாங்கம் சுமார் 2500 பசு மாடுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளமை குறித்து அறியப்படுகிறது.

அதற்கமைய வெகுவிரைவில் பசு மாடுகள் இறக்குமதி செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

4 நிறுவனங்களினால் இவ்வாறு மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் பசு மாடுகளை வளர்ப்பதற்காக கண்டி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் 4 காணிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பசு மாடுகளை இறக்குமதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் உதவிகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும்

நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு பசு மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் டி.பி.ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பசுமாடுகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

Social Share

Leave a Reply