சனத் நிஷாந்தவுக்கு கிடைத்த தண்டனை!

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற செயற்பாடுகள் இன்று (22.11) முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (21.11) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒழுங்கீனச் செயற்பாட்டை கண்டிப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விப் பத்திரத்தை நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த திருடியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply