நட்டத்தில் திணறும் மில்கோ நிறுவனம்!

இலாபம் ஈட்டிக் கொண்டிருந்த மில்கோ நிறுவனம், தற்போதைய தலைவர் ரேணுகா பெரேராவின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக மாறியுள்ளதாக மில்கோ ஸ்ரீலங்கா பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2019, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் இலாபம் ஈட்டிய நிறுவனம் தற்போது கடனில் இயங்குவதாக பணியாளர்கள் சங்க தலைவர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முகாமைத்துவச் செயலாளராக இருந்த ரேணுகா பெரேரா, மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவரின் தலைமையின் கீழ் தற்போது நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply