இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி நேற்று (23.11) இந்தியா, விசாகப்பட்ணத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி 2 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களை பெற்றது. அவுஸ்திரேலியா அணியின் முதல் விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. ஸ்டீபன் ஸ்மித், ஜோஸ் இங்கிலிஷ் ஆகியோர் 160 ஓட்ட இணைப்பாட்டத்தை ஏற்படுத்தினர்.
ஜோஸ் இங்கிலிஷ் 110 ஓட்டங்களையும், ஸ்டீபன் ஸ்மித் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி கடுமையாக போராடி ஒரு பந்து மீதமிருக்க வெற்றி பெற்றது. இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஜோடி 112 ஓட்டங்களை மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றனர்.