பாலியல் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது!

பாலியல் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உப பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாரத்திற்கு ஒருமுறை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடப்பட வேண்டும் என வழங்கப்பட்ட தீர்ப்பை மாதத்திற்கு ஒரு முறை என மாற்றவும், அவருக்கு ஆதரவாக மேலதிக ஆதாரம் ஒன்றை முன் வைக்கவும் ஏற்பாடு செய்து தருவதாக கூறி, வரிப்பத்தான்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மனுதாரர் ஒருவரிடம், பாலியல் இலஞ்சம் பெற முற்பட்ட வேளையில் குறித்த அதிகாரி கல்முனை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Social Share

Leave a Reply