எமிரேட்ஸ் உத்தியோகபூர்வ இணையத்தளம் இஸ்ரேலுக்கான அதன் விமான சேவையை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போதைய நிலை காரணமாக இஸ்ரேலுக்கு குறிப்பிட்ட கால அட்டவணையின்படி விமானங்கள் இயக்கப்படாமல் இருப்பதால், மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலுக்கான விமானச் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளின் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுட்டிக்காப்பட்டுள்ளது.
இதைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய http://www.emirates.com இணையதளத்தைப் பார்வையிடுமாறும் எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.