ஹல்துமுல்ல, பூனாகலை கல்பொக்க பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு வசித்து வந்த 49 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
தேயிலை தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள சாய்வான நிலத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், மலை அடிவாரத்தில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த குடியிருப்பாளர்கள் வசித்து வந்த வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டு வெடித்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்கள் புனகலை இலக்கம் 2 தமிழ்க் கல்லூரி மற்றும் கல் பே பகல்நேர பராமரிப்பு நிலையம் மற்றும் அயலவர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உலர் உணவுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல அனர்த்த நிவாரண சேவை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொஸ்லந்த நாவுல்ல பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் மேலும் டெஹ்ரிவித்துள்ளார்.