கட்டாரின் தலையீட்டின் மூலம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஹமாஸ் அமைப்பிடம் பிணைக் கைதிகளாக இருந்த 24 இஸ்ரேலியர்கள் இன்று (25.11) விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த 24 பேரையும் விடுவிக்க இஸ்ரேல் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட 39 பாலஸ்தீனியர்களை விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் தற்போது நான்கு நாள் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.