பொலிஸார் மீது வெடிகுண்டு வீச முயற்சித்த நபர் கைது!

மாளிகாவத்தை ஆப்பிள் தோட்டம் பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் பதுங்கியிருந்த கைது செய்ய சென்றிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு மீது வெடிகுண்டு வீச முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்த வெடிகுண்டும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அந்த வெடிகுண்டும் இங்கு தயாரிக்கப்பட்டது எனவும் மாளிகாவத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply