இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நேற்று (01.12) ராய்பூரில் 4 ஆவது T20 போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 3-1 என வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது. இதில் ரிங்கு சிங் 46(29) ஓட்டங்களையும், யஷஷ்வி ஜெய்ஸ்வால் 37(28) ஓட்டங்களையும், ஜிதேஷ் ஷர்மா 35(19) ஓட்டங்களையும், ருத்ராஜ் கெய்க்வாட் 32(28) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பென் துவரிஷ் 3 விவிக்கெட்களையும், தன்வீர் சங்கா, ஜேசன் பெஹ்ரெண்டொப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது. இதில் மத்தியூ வேட் ஆட்டமிழக்காமல் 36(23) ஓட்டங்களையும், ட்ரவிஸ் ஹெட் 31(19) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அக்ஷர் படேல் 3 விக்கெட்களையும், தீபக் சஹார் 2 விக்கெட்களையும், ரவி பிஷ்ணோய், அவேஷ் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகனாக அக்ஷர் பட்டேல் தெரிவு செய்யப்பட்டார்.