”மொட்டுக் கட்சியின் அரசியலமைப்பில் மாற்றம்” – நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியலமைப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், ஆனால் கட்சியின் முக்கிய நிர்வாக பதவிகளில் மாற்றம் செய்யப்படாது என ஹம்பாந்தோட்டை மாவட்ட சபை உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாடு எதிர்வரும் 15ம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் நிர்வாக விடயங்கள் பொதுஜன பெரமுனவின் பொறுப்பாளர்களுக்கு மாற்றப்படும் அதேவேளை, கிராம மட்டத்தில் கட்சியை மீளக் கட்டியெழுப்புவது தனியான பொறிமுறையின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்த மறுசீரமைப்புகள் தொடர்பில் தான் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும், அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாக இருப்பதால் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை பலப்படுத்த வேண்டும் எனவும் அதற்காக கட்சியின் செயற்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply