இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் குறைந்த விலையில் மக்களுக்கு..!

இறக்குமதி செய்யப்பட்டு, களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 6 மில்லியன் முட்டைகள் இன்றும் நாளையும் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சதொச விற்பனை நிலையங்களினூடாக குறித்த முட்டைகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளமையினால் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் துறைசார் அமைச்சரின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்ற நிலையில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply