எதிர்கட்சிக்கு செல்லும் ரொஷான் ரணசிங்க?

தான் எதிர்கட்சிக்கு செல்லவுள்ளதாக கூறப்படும் கதை பொய்யானது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (13.12) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தாம் எதிர்க்கட்சிக்கு செல்வதாக நாளிதழ்களில் வெளியாகி உள்ள செய்தி பொய்யானது எனவும் ஆனால் சிலர் தம்மை எதிர்க்கட்சிக்கு அனுப்ப சிலர் முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில், விளையாட்டுத்துறை அமைச்சர் தமது இடைக்கால குழுவை நீக்கியிருந்ததாகவும், அதாவது ஊழலை அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாகவும், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply