போலி சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகித்த ஆசாமி கைது!

போலி சாரதி அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர்களின் உத்தியோகபூர்வ முத்திரைகள், ஏழு பொலிஸ் நிலையங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகள், சட்டத்தரணிகளின் உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் இவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம, கம்பளை, ஹங்கம, இரத்தினபுரி, வயங்கொட மற்றும் கந்தானை ஆகிய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் குறித்த சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Social Share

Leave a Reply