ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் ஆடை தொழிற்சாலை ஒன்றின் பேருந்து சாரதி ஒருவர் இன்று (15.12) காலை வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (15.12) அதிகாலை 5.55 மணியளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையை செய்துவிட்டு சந்தேக நபர் கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் தப்பிச் செல்லும்போது மெகொட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து ஹங்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.