ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2வது தேசிய மாநாடு இன்று..!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2வது தேசிய மாநாடு இன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த மாநாட்டின் ஏற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்றைய தினம் குறித்த விளையாட்டரங்கிற்கு சென்றிருந்தனர்.

கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்து இதன்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply