எதிர்வரும் ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் உயிர்த் தரவுகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அடையாள அட்டை விண்ணப்பிக்கும்போது 76 தரவுகள் கோரப்பட்ட நிலையில், புதிய டிஜிட்டல் அட்டையைப் பெற 6 தரவுகள் மட்டும் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை போதுமானதாகவும், அவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கியதன் பின்னர் படிப்படியாக ஒட்டுமொத்த மக்களுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதே அரசின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.