நாட்டில் பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு – ரோஹினி குமாரி

சமீபத்திய சுகாதார அறிக்கைகளின்படி, இந்த நாட்டில் உள்ள குழந்தைகளில் 2,67,249 பேர் போதிய போஷாக்கு இன்மையால் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுவதாக கல்விக்கான துறைசார் மேற்பார்வை நாடாளுமன்றக் குழு உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஐந்து வயதுக்குட்பட்ட 18 இலட்சம் குழந்தைகளில் 2,34,084 குழந்தைகள் எடை குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் போஷாக்கு நிலை தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டுமென ரோஹினி குமாரி விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply