இந்த நாட்களில் ‘ஹெபடைடிஸ்’ தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நாட்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிள்ளைகளுக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், அவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர்கள் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.