சிறப்பு பிரிவு கைதிகளை ஏற்றிச்செல்லும் சிறைச்சாலை பஸ்களில் CCTV கெமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் வெளியில் அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் இதனூடாக கண்காணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஸ்ஸிற்குள் கைதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பிலும் கண்காணிக்க முடியுமென சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெளியில் இருந்து பஸ்ஸிற்குள் போதைப்பொருளை வீசும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுமார் 14 ஆயிரத்து 500 பேர் தற்போது சிறைச்சாலைகளில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.