ஹோமாகம பிட்டிபான பகுதியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கி கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்று (19.12) மாலை துப்பாக்கியுடன் நுழைந்த இரு கொள்ளையர்கள் அங்கிருந்த ஊழியர்களை பயமுறுத்தி 07 இலட்சம் ரூபா பணத்துடன் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தின்போது வங்கியில் 08 பேர் பணிபுரிந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.