பதுளை ஹாலிஎல ஸ்பிரின்வெளிவத்த பிரதேசத்தில் இன்று பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள வீடுகளின் வரிசையின் கீழ் கரையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பதுளை இடர் வலயத்தில் வசிக்கும் பத்து குடும்பங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறித்த இடத்தினை ஆய்வு செய்யவுள்ளதாகவும், நிறுவனம் அளிக்கும் பரிந்துரைகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.