தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் படி, நவம்பர் மாதத்தில் பணவீக்கம் உயர்வடைந்துள்ளது.
தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டோபர் மாதத்தில் 1 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 2.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஒக்டோபர் மாதத்தில் மறை 5.2 சதவீமாக காணப்பட்ட உணவு பணவீக்கம் நவம்பர் மாதத்தில் மறை 2.2 சதவீமாக அதிகரித்துள்ளது.
அத்துடன், ஒக்டோபர் மாதத்தில் 6.3 சதவீதமாக காணப்பட்ட உணவல்லாத பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 7.1 சதவீமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.