இந்தியத் திரைப்படத்தில் டயனா கமகே..!

இந்தியத் திரைப்படமொன்றில் நடிப்பதற்கு இலங்கை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள டயனா கமகே, அவருடைய பாத்திரத்திற்காக மொட்டையடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை – இந்திய நட்புறவுக்காக அனுபவம் வாய்ந்த இந்திய திரைப்பட இயக்குனரால் உருவாக்கப்படும் பௌத்தமதத்தினை கருப்பொருளாகக் கொண்ட குறித்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சரான டயனா கமகே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply