இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நேற்று (21.12) மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியாக பார்லில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி 78 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னப்பிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 296 ஓட்டங்களை பெற்றது. இதில் சஞ்சு சம்சன் 108(114) ஓட்டங்களையும், திலக் வர்மா 52(77) ஓட்டங்களையும், ரிங்கு சிங் 38(27) ஓட்டங்களையும் பெற்றனர். சஞ்சு சம்சன் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் தனது 1 ஆவது சதத்தை பூர்த்தி செய்துகொண்டார். பந்துவீச்சில் பியூரன் ஹென்றிக்ஸ் 3 விக்கெட்களையும், நன்றே பேர்கர் 2 விக்கெட்களையும், லிசாட் வில்லியம்ஸ், கேஷவ் மஹராஜ், வியான் முல்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 218 ஓட்டங்களை பெற்றது. இதில் டொனி டி சொர்சி 81(87) ஓட்டங்களையும், எய்டன் மார்க்ரம் 36(41) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்களையும், அவேஷ் கான், வஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், முகேஷ் குமார், அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா ஒவ்வ்ரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகனாக சஞ்சு சம்சன் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த தொடரின் நாயகனாக அர்ஷ்தீப் சிங் தெரிவு செய்யப்பட்டார்.