அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள புயல் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அண்ணளவாக நூறை அண்மித்தவர்கள் மரணமாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. 1000 இற்கும் அதிகமான வாகனங்கள் முழுமையையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீடுகள், வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் நிலக்கீழ் பகுதிகள் நீரினால் நிறைந்து போயுள்ளன. இந்த நிலையில் நியூயோர்க் மற்றும் ஜெர்ஸி ஆகிய மாநிலங்களில் அவசர நிலையினை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
உலக வெப்பநிலை அதிகரிப்பினால் அதிகரித்த மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதனாலும், கடல் மட்டம் உயர்வடைவதனாலும் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. தொடர்ந்தும் கடும் மழை பெய்துவருவதனால் மேலும் சேதங்கள் அதிகரிக்கும் நிலையம் உருவாகியுள்ளது. வாகனப்போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை இன்னமும் மோசமடையும் என்றே வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலைமை மோசமடையுமாயின் அமெரிக்க மேலும் கடுமையான அழிவுகளை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளன.