அமைச்சர்களின் பிள்ளைகள் இராஜயோகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் வேலை வாய்ப்பிற்காக மியன்மார் சென்ற 56 இளைஞர்கள் தீவிரவாதத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 56 ஆவது கட்டமாக வத்தளை பமுனுகம கொன்சால்வ்ஸ் கல்லூரி 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களுக்கு நாட்டின் மீதும், தற்போதைய ஆட்சியின் மீதும் நம்பிக்கை இன்மையால் திறமைசாலிகள்,புத்திசாலிகள் மற்றும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் எமது நாட்டை விட குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட பெரும்பாலான இளைஞர்கள் வேலை தேடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சம மற்றும் எதிர்காலத்தினை சிந்தித்தும் அரசாங்கத்திடம் சரியான தொலைநோக்கு பார்வை இன்மையை உணர்ந்தும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்ற சுமார் 56 இளைஞர்கள் மனித கடத்தல் கும்பல்களிடம் சிக்கியுள்ளதுடன் தற்போது மியான்மாரில் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கி பரிதாபகரமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்திலிருந்தாவது தற்போதைய ஆட்சியாளர்கள் கண் திறக்க வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏயுவு போன்றவற்றின் அதிக வரிச்சுமையினால் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாலும்,இளைஞர்கள் விரக்தியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களை பொருளாதார அபிவிருத்தியில் பங்குதாரர்களாக்க முடியும் என கூறிய சஜித் பிரேமதாச அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியை விட பொருளாதார சுருக்கத்தில் கவனம் செலுத்துவதால் இளைஞர்களை நாட்டை கட்டியெழுப்பும் தலைவர்களாக மாற்ற முடியாதுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.