உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று மீண்டும் 80 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 79.85 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த மாதம் 30ஆம் திகதிக்குப் பின்னர் அதிகபட்ச மதிப்பு இன்றைய தினம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, செங்கடலில் எரிபொருள் போக்குவரத்து மீதான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்தால், உலக சந்தையில் எண்ணெய் விலையை மேலும் பாதிக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.