வார இறுதி நாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் அத்தியாவசியமற்ற பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட அனைத்து மின்சாரத் தடைகளையும் இடைநிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபைக்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ x வலைத்தளத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.